செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தெப்பத் திருவிழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்!

11:02 AM Jan 29, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் தெப்பத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு தெப்பத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நந்தி தேவர் படம் பொறித்த திருக்கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக, கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்த சுவாமிக்கும், தெய்வானைக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Advertisement

இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப்ரவரி 6-ஆம் தேதி தெப்பம் தள்ளுதல் நிகழ்வும், திருத்தேரோட்டமும், பிப்ரவரி 7ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.

Advertisement
Tags :
FEATUREDMaduraiMAINTheppam festivalthiruparankundram murugan temple
Advertisement