செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருப்புவனம் அருகே ஒரு ரூபாய்க்கு இட்லி - பாட்டிக்கு குவியும் பாராட்டு!

07:15 PM Oct 31, 2024 IST | Murugesan M

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் மூதாட்டிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

லாடநேந்தல் கிராமத்தை சேர்ந்த சின்னப்பொண்ணு என்ற 70 வயது மூதாட்டி கடந்த 40 ஆண்டுகளாக இட்லி விற்பனை செய்து வருகிறார். ஆரம்பத்தில் ஐந்து பைசாவுக்கு ஒரு இட்லி விற்ற அவர் தற்போது ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி வழங்கி வருகிறார்.

தினமும் 200 இட்லிகளை தயார் செய்யும் இவர், சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து, மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் விவசாயிகள், செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு இட்லி விற்பனை செய்கிறார். இவர் தயாரிக்கும் இட்லியை சாப்பிட்டால் மன நிறைவாக உள்ளதென பலரும் வாழ்த்தி செல்கின்றனர்.

Advertisement

 

Advertisement
Tags :
MAINsivagangaiTiruppuvanam.one rupee itly
Advertisement
Next Article