திருப்புவனம் அருகே தனியார் சோலார் பிளாண்ட் காவலாளி தீயில் சிக்கி பலி!
07:07 AM Apr 01, 2025 IST
|
Ramamoorthy S
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தனியார் சோலார் பிளாண்ட் காவலாளி, தீயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
மஞ்சக்குடியில் உள்ள தனியார் பிளாண்ட் வளாகத்தில் காய்ந்த புற்களில் ஏற்பட்ட தீயில் சிக்கி காவலாளி சேகர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.
அப்போது, இறப்பிற்கான காரணத்தை கண்டறியவும், இழப்பீடு வழங்க கோரியும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் சமாதானம் பேசி சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement