திருப்பூரில் தந்தை - மகனை அரிவாளால் வெட்டிய இளைஞர்கள் கைது!
12:06 PM Mar 25, 2025 IST
|
Murugesan M
திருப்பூரில் மளிகைக் கடை பூட்டை உடைக்க முயன்ற போது வீடியோ எடுத்ததால் தந்தை - மகனை அரிவாளால் வெட்டிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
Advertisement
முருகன்பாளையம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது வீட்டிற்கு அருகே உள்ள மளிகைக் கடைக்கு மதுபோதையில் வந்த இளைஞர்கள் கடையின் பூட்டை உடைத்துத் திருட முயன்றுள்ளனர்.
அப்போது அவர்களை முருகேசனின் மகன் அரவிந்தன் வீடியோ எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அரவிந்தன் மற்றும் அவரது தந்தை முருகேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
Advertisement
இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறை கைது செய்தனர்.
Advertisement