செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருப்பூரில் வங்கதேச இளைஞர்கள் 28 பேர் அதிரடியாக கைது‌!

03:39 PM Jan 25, 2025 IST | Murugesan M

திருப்பூரில் தீவிரவாத தடுப்பு குழு போலீசார் நடத்திய சோதனையில் 28 வங்கதேச இளைஞர்கள் கைது‌ செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

வங்கதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் திருப்பூரில் ஊடுருவி, போலி ஆதார் கார்டு கொடுத்து பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருவதாக, தீவிரவாத தடுப்பு குழு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், விசாரணை நடத்திய போலீசார், அருள்புரம், வீரபாண்டி மற்றும் நல்லூரில் 30 -க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

இவர்களில் 28 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்களை கைது செய்தனர். ஏற்கனவே, 46 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement
Tags :
28 bangladeshi arrest28 Bangladeshi youth arrested in action!FEATUREDMAINTirupur
Advertisement
Next Article