திருப்பூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - வாகன ஓட்டுநர் கைது!
04:19 PM Jan 29, 2025 IST
|
Murugesan M
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாகன ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
கொளத்துப்பாளையத்தில் 9 -ம் வகுப்பு படித்து வரும் மாணவி, வகுப்பு முடிந்து வீடு திரும்புவதற்காக, அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் தனது தோழிகளுடன் காத்திருந்தார்.
அப்போது, அங்கு வந்த வாகன ஓட்டுநர் கனகராஜ் என்பவர், மாணவியை தாக்கியதோடு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில், ஓட்டுநர் கனகராஜ் கைது செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement