திருப்பூர் மாநகராட்சி துணையோடு சமபந்தி விருந்து என்ற பெயரில் மதமாற்ற நிகழ்ச்சி - இந்து முன்னணி குற்றச்சாட்டு!
திருப்பூர் மாநகராட்சி துணையோடு சமபந்தி விருந்து என்ற பெயரில் மதமாற்றம் நிகழ்ச்சி நடைபெற்றதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.
Advertisement
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூரில் இயேசுவின் சமாதானம் என்ற பெயரில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு சமபந்தி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது எனவும்,
இதில், ஏழைகளுக்கு கொடுப்பதை இயேசு பல்லாயிரம் மடங்கு திருப்பித் தருவார் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகள் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டதால், அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் மதமாற்ற நிகழ்ச்சியில் சிக்கி போலீசாரால் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்ட நடிகர் பெஞ்சமின் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது எப்படி? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் மற்றும் கவுன்சிலர் ஆதரவோடு மதமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது எனவும், திமுக ஆட்சியில் அரசு அலுவலகங்களில் இதுபோன்ற கிறிஸ்துவ மதமாற்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதாகவும் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.