திருமண விழாவில் மோதல் - வணிக வளாக ஊழியர் மீது தாக்குதல்!
12:07 PM Feb 05, 2025 IST
|
Sivasubramanian P
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வணிக வளாக ஊழியரை 4 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Advertisement
குன்னூர் அருகே நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் என்பவர் கலந்து கொண்டு பாடலுக்கு ஏற்ப நடனமாடியுள்ளார். அப்போது, திடீரென ஒருவர் பாடலை நிறுத்தியதால் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த மணமகள் வீட்டார், நிதிஷ்குமார் பணிபுரியும் வணிக வளாகத்திற்கு சென்று அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் வணிக வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement