திருமணத்தை மீறிய உறவில் நீண்ட நாள் இருந்த நிலையில் பாலியல் குற்றம் சுமத்த முடியாது - உச்ச நீதிமன்றம்
திருமணத்தை மீறிய உறவில் நீண்ட காலமாக ஒருமித்த கருத்துடன் வாழ்ந்து விட்டு பாலியல் வன்கொடுமை குற்றம் சுமத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Advertisement
மும்பையை சேர்ந்த வனிதா என்பவர், ஏற்கனவே திருமணமான மகேஷ் தாமு என்பவருடன் பல ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், தன்னை திருமணம் செய்யாமல் மகேஷ் ஏமாற்றியதாகவும், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பான வழக்கு பி.வி. நாகரத்னா, கோட்டிஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமணத்தை மீறிய உறவு கசந்த பிறகு அது பாலியல் குற்றமாக கருதப்படுவது வருத்தமளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
பல ஆண்டுகளாக தாம்பத்திய உறவில் இருந்துவிட்டு, உறவில் விரிசல் ஏற்படும்போது சம்மந்தப்பட்ட ஆண் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள் மகேஷ் தாமு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.