செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருமணம் செய்த சூரியனார் கோயில் ஆதீனம் - மடத்தின் சாவி அறநிலையத்துறையிடம் ஒப்படைப்பு!

10:23 AM Nov 13, 2024 IST | Murugesan M

திருமணம் செய்துகொண்ட சூரியனார் கோயில் ஆதீனத்தை பொதுமக்கள் வெளியேற்றிய நிலையில் மடத்துக்கான சாவிகளை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

Advertisement

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே சூரியனார் கோவில் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 28வது மடாதிபதியான மகாலிங்க சுவாமிகள், கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகாவைச் சேர்ந்த ஹேமாஸ்ரீ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆதீனமாக இருப்பவர் எவ்வாறு திருமணம் செய்துகொள்ளலாம் என பல சர்ச்சை கருத்துகள் எழும்பிய நிலையில் சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து ஆதீனம் மடத்தின் வாசல் மற்றும் ஆடுதுறை, கும்பகோணம் பகுதிகளில் அவருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மேலும், திருமணம் ஆனவர்கள் ஆதீனமாக இருக்க கூடாது எனக்கூறி மகாலிங்க சுவாமிகளை மடத்தை விட்டு வெளியேற்றிய பொதுமக்கள் மடத்தை இழுத்து பூட்டினர்.

Advertisement

இதனைத்தொடர்ந்து போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்ததுடன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தனது பொறுப்புகளை ஒப்படைப்பதாக கூறிய மகாலிங்க சுவாமிகள், மடம் தொடர்பான சாவிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தாம் இன்னும் சூரியனார் கோயில் ஆதீனமாக நீடிப்பதாகவும், தமது நிர்வாக பொறுப்புகளை மட்டுமே இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தார். தமது திருமணத்திற்கும், தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை எனவும் அவர் கூறினார்.

 

Advertisement
Tags :
Mahalinga Swam marrigae issueMahalinga SwamiMAINSuryanar Koil AdeenamSuryanar TempleTiruvidaimarudur
Advertisement
Next Article