For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு : சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடக்கம்!

09:56 AM Dec 03, 2024 IST | Murugesan M
திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு   சேலம்   பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடக்கம்

சேலம் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முடங்கியது.

சேலத்தில் நேற்றிரவு கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், திருமணிமுத்தாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தொடர்ந்து கந்தம்பட்டி பகுதியில் உள்ள மேம்பாலத்தை வெள்ளம் சூழ்ந்ததால், சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கின.

Advertisement

இதனால் விடிய விடிய அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன. இதை தொடர்ந்து அங்குவிரைந்த தீயணைப்புத்துறையினர், நீரில் சிக்கிய வாகனங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

,இதனிடையே சேலத்தில் கொட்டித்தீர்த்த நிலையில், குப்தா நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் இரவு நேரத்தில் தவித்த மக்கள், தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் ரஞ்சித் சிங் நேரில் பார்வையிட்டார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement