பொங்கல் பண்டிகை - திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
Advertisement
கடியாபட்டி கிராமத்தில் பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. பெரிய மாட்டு பிரிவில் ஏழு மாட்டு வண்டிகளும், சிறிய மாடு பிரிவில் 16 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.
அப்போது, சாலையில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை சாலையின் இரு புறங்களிலும் நின்று ஏராளமானோர் கண்டு ரசித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்கத் தொகை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காணும் பொங்கலை ஒட்டி ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று குதிரை மற்றும் மாடுகளுக்கான ரேக்ளா பந்தயம் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், 45ஆம் ஆண்டுக்கான போட்டி திருக்கடையூர் முதல் தரங்கம்பாடி வரை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாடுகள் மற்றும் குதிரை வண்டிகளுடன் வீரர்கள் கலந்து கொண்டனர்.இதனை காண்பதற்காக திரளான பார்வையாளர்கள் குவிந்தனர்.