திருமலை மலைப்பாதையில் காரில் சாகசம் செய்த இளைஞர்கள்!
12:19 PM Dec 04, 2024 IST
|
Murugesan M
திருமலை மலைப்பாதையில் காரில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் சுசில், விகாஸ், பிரபஞ்சன், ஆதர்ஷ், ரமேஷ், சுமன். இவர்கள் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக காரில் வந்தனர்.
திருப்பதி மலைப்பாதையில், இளைஞர்கள் காரின் கதவுகளை திறந்து விட்டபடியும் மேற்கூறையில் நின்றபடியும் காரை தாறுமாறாக ஓட்டி ஆபத்தான முறையில் சாகசம் செய்தனர். மேலும் செல்பி வீடியோ எடுத்தபடி கத்தி கூச்சலிட்டபடி ஆரவாரம் செய்தனர்.
Advertisement
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து திருப்பதி தேவதஸ்தானம் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை கொண்டு 6 இளைஞர்களையும் கைது செய்த போலீசார், அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
Advertisement
Next Article