திரும்பப் பெறப்படாத ரூ.2000 நோட்டுகள் எவ்வளவு?
கடந்த 1ஆம் தேதி நிலவரப்படி 6 ஆயிரத்து 967 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படாமல் உள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
Advertisement
நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், கடந்த ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி நிலவரப்படி 3 லட்சத்து 55 ஆயிரத்து 858 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும், அதில் 3 லட்சத்து 42 ஆயிரத்து 840 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி திரும்பப் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
13 ஆயிரத்து 18 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் மட்டும் பாக்கி இருந்ததாகவும், கடந்த 1ஆம் தேதி நிலவரப்படி 6 ஆயிரத்து 967 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் மட்டும் திரும்பப் பெறப்படாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.