செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் - ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

06:01 PM Dec 13, 2024 IST | Murugesan M

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவின் சிகர நிகழ்ச்சியாக,  மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

Advertisement

திரு​வண்ணாமலை அண்ணா​மலை​யார் கோயி​லில் நடைபெறும் கார்த்திகை தீபத் திரு​விழா உலக பிரசித்திப் பெற்​றது. இந்தாண்டு திரு​விழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபத்தை முன்னிட்டு, அதிகாலை 3.30 மணி அளவில் கோயில் கருவறை முன்பு அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி கரகோஷத்துடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

Advertisement

இதனை தொடர்ந்து,மாலை 6 மணிக்கு, 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள திரு​வண்ணாமலை மலைஉச்சி​யில் மகா தீபம் ஏற்றப்​பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகொரா என்ற கோஷமிட்டனர். மேலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

தீப திருநாளை முன்னிட்டு  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  மேலும், சென்னை தாம்பரத்தில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை இயக்கப்படுகிறது.

Advertisement
Tags :
Annamalayar Templebharani deepamdevooteesFEATUREDgirivalamkarthigai deepamKarthigai Deepam festivalMAINTiruvannamalai Karthigai Deepamtv malai
Advertisement
Next Article