திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புதுப்பிக்கப்பட்ட திருத்தேர் வெள்ளோட்டம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புதுப்பிக்கப்பட்ட திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. தொடர்ந்து டிசம்பர் 13ம் தேதி 20 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இந்நிகழ்வை முன்னிட்டு கோயில் தேரின் தரத்தை பரிசோதித்த பொதுப்பணித்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், திருவிழாவிற்கு முன்பாகவே தேரை புதுப்பிக்க முடிவு செய்தனர்.
தொடர்ந்து இதற்கு 70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அண்ணாமலையார் கோயில் தேர் புதுப்பிக்கப்பட்டு வண்ணம் பூசப்பட்டது. தொடர்ந்து இன்று திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். இதையொட்டி டிஐஜி பொன்னி தலைமையில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்.