For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா - பரணி தீபம் ஏற்றம்!

10:26 AM Dec 13, 2024 IST | Murugesan M
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா    பரணி தீபம் ஏற்றம்

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவின் சிகர நிகழ்ச்சியாக, இன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

திரு​வண்ணாமலை அண்ணா​மலை​யார் கோயி​லில் நடைபெறும் கார்த்திகை தீபத் திரு​விழா உலக பிரசித்திப் பெற்​றது. இந்தாண்டு திரு​விழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

Advertisement

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபத்தை முன்னிட்டு, அதிகாலை 3.30 மணி அளவில் கோயில் கருவறை முன்பு அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி கரகோஷத்துடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து, இன்று மாலை 6 மணிக்கு, 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள திரு​வண்ணாமலை மலைஉச்சி​யில் மகா தீபம் ஏற்றப்​படுகிறது. தீபத்தை ஏற்றுவதற்கான கொப்பரை நேற்று மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

Advertisement

மகாதீபத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 850 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படவுள்ளன. மேலும், சென்னை தாம்பரத்தில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
Advertisement