செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருவண்ணாமலை நிலச்சரிவு : ஒரே இடத்தில் 7 பேரின் உடல் அடக்கம்!

06:30 PM Dec 05, 2024 IST | Murugesan M

திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடலுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்திய நிலையில், அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து உறவினர்கள் இறுதிச்சடங்கு நடத்தினர்.

Advertisement

திருவண்ணாமலையில் பாறைகள் சரிந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த ஏழு பேரின் உடல்களும், உறவினர்களின் கதறலுக்கு மத்தியில் இறுதிச் சடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்ட காட்சி தான் இது....

திருவண்ணாமலையில் இப்படி ஒரு கோர விபத்து நிகழும் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் மலையடிவார பகுதியான வ.உ.சி நகரில் நிலச்சரிவு ஏற்பட்டு, இரண்டு வீடுகள் மீது  பாறைகள் உருண்டு விழுந்தன.

Advertisement

கண்இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில்,  5 சிறுவர்கள் உட்பட 7 பேர் வீடுகளுக்கு உள்ளேயே மண்ணில் புதையுண்டனர். என்ன நிகழ்ந்தது, அடுத்து என்ன செய்வது என்று உணர்வதற்கே அப்பகுதி மக்களுக்கு சில நிமிடங்கள் பிடித்தது.

கனமழைக்கு இடையே சுமார் 20 மணி நேரம் தொடர் மீட்புப் பணியின் முடிவில் 7 பேரும் உயிரற்ற சடலங்களாகவே மீட்கப்பட்டனர். குறிப்பாக சிறுவர்களின் உடல் இடிபாடுகளில் சிக்கி மிக மோசமாக பாதிக்கப்பட்டது உறவினர்களை கதறச் செய்தது

ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த கோர விபத்தில் உயிரிழந்த ஏழு பேரின்  உடல்களும் தனித்தனி வாகனங்களில் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

இறுதியாக, அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து உறவினர்கள் தகனம் செய்தனர்.

 

Advertisement
Tags :
tiruvannamalaiVOC NagarTiruvannamalai landslidetearful tributesrocks rolled down on houses
Advertisement
Next Article