திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் குத்தியோட்ட நேர்ச்சை வழிபாடு!
திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் நள்ளிரவு நடந்த குத்தியோட்ட நேர்ச்சையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் உலகப் புகழ்பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிடும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அம்மனின் முக்கிய வழிபாடாக கருதப்படும் குத்தியோட்ட நேர்ச்சையானது நள்ளிரவில் கோலாகலமாக நடைபெற்றது.
குழந்தைகள் ஆரோக்கியமாகவும், நோய்நொடிகளின்றி வாழவேண்டுமெனவும் வேண்டிக் கொண்டு அம்மனுக்கு தங்கள் குழந்தைகளை அர்ப்பணிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
குத்தியோட்ட நேர்ச்சை நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் அம்மனாக அலங்கரிக்கபட்டு மேளதாளங்களுடன் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டு, அம்மன் முன்பு அர்ப்பணிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.