திருவள்ளூர் அருகே கோயிலை இடிக்க எதிர்ப்பு - போலீசாருடன் கிராம மக்கள் வாக்குவாதம்!
08:30 PM Nov 14, 2024 IST
|
Murugesan M
திருவள்ளூர் அருகே கோயிலை இடித்து அகற்ற வந்த வட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பியை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
புல்லரம்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ண சுவாமி கோயில் மற்றும் சந்தான விநாயகர் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயில் நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி இடிப்பதற்காக திருவள்ளூர் வட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி தலைமையிலான ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீசார் கிராமத்திற்கு சென்றனர்.
Advertisement
அப்போது கிராம மக்கள் கோயிலை இடிக்க கூடாது என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
Advertisement