செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திரைப்பட சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியில்லை - தெலங்கானா அரசு அறிவிப்பு!

12:30 PM Dec 07, 2024 IST | Murugesan M

புஷ்பா 2 சிறப்பு காட்சியை காண சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானதன் எதிரொலியாக, இனி எந்த படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.

Advertisement

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவான புஷ்பா 2 திரைப்படம் நேற்று முன்தினம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது.

புஷ்பா 2 படத்துக்கு தெலங்கானா அரசு அனுமதி பெற்று திரையிடப்பட்ட அதிகாலை சிறப்பு காட்சியை காண ஆயிரக்கணக்கானோர் தியேட்டர்களில் திரண்டனர்.

Advertisement

அப்போது சிறப்பு காட்சியை காண ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். இது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இனி  எந்த படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. அதிகாலை காட்சிகளுக்கும் அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது.

இதனிடையே கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அல்லு அர்ஜூன் அறிவித்துள்ளார்.

Advertisement
Tags :
allu arjunBhagat FaasilFEATUREDMAINPushpa-2.Rashmika Mandanna aspecial showspecial show bannedTelangana government
Advertisement
Next Article