தீபாவளி சிறப்பு பேருந்துகளில் 30 % மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது - அரசு போக்குவரத்து கழகம் தகவல்!
தீபாவளி சிறப்பு பேருந்துகளில் 30 சதவிகிதம் மட்டுமே முன்பதிவு நடந்துள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
Advertisement
தீபாவளி பண்டிகையை மக்கள் சொந்த ஊரில் கொண்டாடுவதற்கு வசதிக்காக, தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து 11,176 பேருந்துகள் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் 14,860 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தீபாவளி சிறப்பு பேருந்துகளில் 30 சதவிகிதம் மட்டுமே முன்பதிவு நடந்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணத்தை உறுதி செய்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு போக்குவரத்துக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால் 30 ஆம் தேதியில் பயணம் செயய டிக்கெட் கிடைக்கவில்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு ஏசி பேருந்து டிகெட்டுக்கள் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.