தீபாவளி சிறப்பு பேருந்துகள் முறையாக இயக்கப்படவில்லை - பயணிகள் குற்றச்சாட்டு!
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மற்றும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து முறையாக பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
Advertisement
தீபாவளியை முன்னிட்டு கடந்த 28ஆம் தேதி முதல் சென்னையில் 11 ஆயிரத்து 176 பேருந்துகள் உள்பட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து மொத்தம் 14,086 பேருந்துகள் 3 நாட்களுக்கு இயக்கப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் சொந்த ஊரில் கொண்டாட தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில், கிளம்பாக்கம் பேருந்து முனையத்தில் குவிந்தனர். முன்பதிவு செய்திருந்தும் பேருந்துகள் கிடைக்கவில்லை என்றும், சிறப்பு பேருந்துகள் முறையாக இயக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டினர். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளும் முறையாக பதிலளிக்க வில்லை என அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலும், சொந்து ஊர் செல்ல மக்களின் கூட்டம் அலைமோதியது. இங்கிருந்து காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்கள், பேருந்துகள் கிடைக்காமல், பல மணி நேரம் காத்து கிடந்தனர். சிறப்பு பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுவதாக அரசு கூறிய நிலையில், முறையாக பேருந்துகள் இயக்கப்படவில்லை என பொதுமக்கள் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.