தீபாவளி பண்டிகை - இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்!
06:50 PM Oct 31, 2024 IST | Murugesan M
தீபாவளி பண்டிகையை ஒட்டி இறைச்சி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
விழுப்புரத்தில் அதிகாலை முதலே ஏராளமானோர் இறைச்சிகளை வாங்க ஆர்வம் காட்டினர். ஆடு மட்டுமின்றி கோழி, மீன் உள்ளிட்டவற்றையும் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.
Advertisement
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி இறைச்சி விற்பனை களைகட்டியது. அதிகாலை முதலே இறைச்சிக் கடைகளில் குவிந்த பொதுமக்கள், போட்டி போட்டுக்கொண்டு இறைச்சிகளை வாங்கிச் சென்றனர்.
இதேபோல், ராமநாதபுரத்தில் உள்ள இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஆடு, கோழி, மீன் அதிகளவில் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Advertisement
Advertisement