தீபாவளி பண்டிகை - கோயில்களில் சிறப்பு வழிபாடு!
தீபாவளி பண்டிகையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Advertisement
சென்னையில் உள்ள பிரசித்திப் பெற்ற வடபழனி முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதிகாலை முதலே கோயிலில் குவிந்த மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல, திருச்சியில் உள்ள தாயுமானவர் சுவாமி கோயிலில் தீபாவளி பண்டிகையையொட்டி அதிகாலை முதலே மாணிக்க விநாயகர், உச்சி பிள்ளையார் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், புத்தாடை உடுத்தி வருகை புரிந்த ஏராளமான பக்தர்கள் பெருவுடையாரை வழிபட்டனர்.
சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் உள்ள ஹரி ஹர தேவாலயத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி லட்டு தேரில் எழுந்தருளி அன்னபூரணி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோல, பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஈரோட்டில் உள்ள கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். அதிகாலையில் புத்தாடை அணிந்து கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள், உற்சவ பெருமானை மனமுருக வழிபட்டுச் சென்றனர்.