செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தீபாவளி பண்டிகை - திருச்சி கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்!

05:14 PM Oct 27, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வார விடுமுறை தினத்தையொட்டி திருச்சி மாநகரில் உள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Advertisement

தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில், வார விடுமுறை காரணமாக திருச்சி மாநகரின் கடை வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். மலைக்கோட்டை என்.எஸ்.பி. சாலை, சிங்கார தோப்பு, சூப்பர் பஜார், நந்தி கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகள், தங்க நகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு ஏராளமான தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

Advertisement

மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு திருச்சி மாநகர காவல் துறை சார்பில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 185 சிசிடிவி கேமராக்களை பொருத்தி கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிப்பு பணிகளிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
Tags :
deepavaliDiwaliFEATUREDMAINNandi Kovil Street.trichytrichy crowduper Bazaar
Advertisement