தீபாவளி பண்டிகை - பேளூர் கால்நடை சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
10:49 AM Oct 28, 2024 IST
|
Murugesan M
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் கால்நடை சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
Advertisement
பேளூர் பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் சேலம் மட்டுமல்லாது பெரம்பலூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை, விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. சந்தையில் சுமார் 2 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
Advertisement
Advertisement
Next Article