தீபாவளி - மகிழ்ச்சியுடன் கொண்டாடிய புதுமண தம்பதிகள்!
02:59 PM Oct 31, 2024 IST | Murugesan M
தீபாவளி பண்டிகையை புதுமண தம்பதிகள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
திருமணமான பின் கொண்டாடும் முதல் தீபாவளியை தலை தீபாவளியாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் ஈரோடு வெட்டுக்காட்டு வலசை பகுதியை சேர்ந்த சந்தோஷ் - நவீனா தம்பதி தலை தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
Advertisement
அதிகாலையில் எழுந்து புத்தாடை உடுத்தி சுவாமி தரிசனம் செய்த அவர்கள், உறவினர்களுடன் சேர்ந்து பட்டாசுகள் வெடித்து தலை தீபாவளியை கொண்டாடினர்.
அதேபோல் திருநெல்வேலியில் புதுமண தம்பதியினர் தலை தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். தொடர்ந்து வீட்டில் சுவாமி தரிசனம் செய்தும், பட்டாசு வெடித்தும் அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement