தீபாவளி வசூல் தீவிரம் - நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் ரூ. 3 லட்சம் பறிமுதல்!
12:25 PM Oct 26, 2024 IST
|
Murugesan M
நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், சுமார் 3 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
Advertisement
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நெல்லியாளம் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில் நகராட்சி அலுவலகத்திற்கு விரைந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து நகராட்சி தலைவர் சிவகாமியிடம் இருந்து கணக்கில் வராத சுமார் 3 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
Advertisement
Advertisement
Next Article