தீமைகள் அகன்று, அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கட்டும்! - அண்ணாமலை போகி வாழ்த்து
அனைவரின் வாழ்க்கையில், அல்லவை நீங்கி நல்லவை பெருகிடவும், நேர்மறை எண்ணங்கள் சிறந்திட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போகிப் பண்டிகை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement
தை முதல் நாளில், தமிழர்களின் முக்கியப் பண்டிகையான பொங்கல் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் மார்கழியின் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே வீட்டில் உள்ள பழைய பொருள்களை எரித்தும், சிறுவர்கள் மேளம் அடித்தும் போகியை உற்சாகமாகக் கொண்டாடினர்.
இந்நிலையில் இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய போகிப் பண்டிகை நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரின் வாழ்க்கையில், அல்லவை நீங்கி நல்லவை பெருகிடவும், நேர்மறை எண்ணங்கள் சிறந்திடவும், தீமைகள் அகன்று, அமைதியும், மகிழ்ச்சியும், வெற்றியும் கிடைத்திடவும் வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.