செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தீ விபத்தில் சிக்கி பவன் கல்யாணின் இளைய மகன் காயம்!

01:04 PM Apr 08, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சிங்கப்பூரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மகன் காயம் அடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

ஆந்திர துணை முதலமைச்சர் இளைய மகன் மார்க் சங்கர் சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் மார்க் சங்கரின் கைகள், மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மார்க் சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

தீ விபத்து குறித்து அறிந்துகொண்ட பவன் கல்யாண், மகனைப் பார்ப்பதற்காகச் சிங்கப்பூர் செல்ல உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Tags :
MAINPawan Kalyan's younger son injured in fire accidentபவன் கல்யாணின் மகன் காயம்
Advertisement