For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

துளசி கௌடா மறைவு! : பிரதமர் மோடி இரங்கல்

03:21 PM Dec 17, 2024 IST | Murugesan M
துளசி கௌடா மறைவு    பிரதமர் மோடி இரங்கல்

கர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்ம விருது பெற்றவருமான துளசி கவுடா மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  எக்ஸ் பதிவில்,

Advertisement

"கர்நாடகாவைச் சேர்ந்த மதிப்பிற்குரிய சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்ம விருது பெற்றவருமான துளசி கவுடாவின்  மறைவு குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன்.

இயற்கையை பேணி வளர்ப்பதற்கும், ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நடுவதற்கும், நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

Advertisement

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக அவர் இருப்பார். அவரது பணியானது நமது பூமியைப் பாதுகாக்க எதிர்கால தலைமுறையினருக்கு  தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், சுற்றதாருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி..!  எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
Advertisement