செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பொங்கல் பண்டிகை - உற்சாகமாக கொண்டாடிய வெளிநாட்டினர்!

09:46 AM Jan 05, 2025 IST | Murugesan M

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே வெளிநாட்டினர்  தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

Advertisement

இங்கிலாந்து ஆஸ்திரேலியா, அயர்லாந்து, சிலி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 21 பேர் தமிழகத்திற்கு சுற்றுலா வந்திருந்தனர். இந்நிலையில், சாயர்புரம் பண்னை தோட்டத்திற்கு வந்த அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகையை அவர்கள் கொண்டாடினர். ஆண்கள் வேஷ்டி துண்டும், பெண்கள் சேலையும் அணிந்து வந்து மண் பானையில் பொங்கல் வைத்தனர்.

Advertisement

பொங்கல் பொங்கி வந்தபோது பொங்கலோ பொங்கல் என குலவை சப்தமிட்டனர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியர் தயார் செய்த பொங்கல் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

 

Advertisement
Tags :
'Pongalo Pongal'.FEATUREDForeigners celebrated the Pongal festivalMAINPongal festivalSayarpuramThoothukudi
Advertisement
Next Article