செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தூத்துக்குடி, சாத்தான்குளம் சம்பவங்களை மறந்துவிட முடியாது : முதலமைச்சர் ஸ்டாலின்

01:33 PM Mar 20, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஈரோடு கொலை சம்பவம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், சாத்தான் குளம் சம்பவத்தை மறந்து விடக் கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisement

இதுதொடர்பாக அவையில் பேசிய அவர், ஈரோடு சம்பவம் பழிவாங்கும் நடவடிக்கை எனத் தெரியவந்துள்ளதாகக் கூறினார்.

காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரிவித்த முதலமைச்சர், குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக விளக்கம் அளித்தார்.

Advertisement

மேலும், தூத்துக்குடி, சாத்தான்குளம் சம்பவங்களை மறந்துவிட முடியாது எனத் தெரிவித்த அவர், தைரியமிருந்தால் தான் பேசுவதைக் கேட்டுவிட்டுச் செல்லுமாறு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பார்த்து கூறினார்

Advertisement
Tags :
MAINMK Stalintoday TN ASSEMBLYWe cannot forget the incidents in Thoothukudi and Sathankulam: Chief Minister Stalin
Advertisement