தூத்துக்குடி: தீ விபத்து காரணமாக அனல் மின் நிலையத்தில் 630 மெகாவாட் மான் உற்பத்தி பாதிப்பு!
11:04 AM Mar 16, 2025 IST
|
Murugesan M
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து காரணமாக 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள கேபிள் கேலரி பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், அனல் மின் நிலையத்தின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் மின்சார வயர்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஏற்கனவே ஒன்றாவது, மூன்றாவது யூனிட்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது யூனிட்டிலும் தீ விபத்து காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தற்போது 3 யூனிட்களில் மொத்தம் 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement