செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 9 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை - பொதுமக்கள் அவதி!

03:18 PM Nov 20, 2024 IST | Murugesan M

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து 9 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருவதால் சாலையில் குளம்போல் மழை நீர் தேங்கியுள்ளதால் பொது மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

Advertisement

தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்டத்தில், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், காயல்பட்டினம், சாத்தான்குளம், கோவில்பட்டி மற்றும் ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 9 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது.

இதனால், இன்று இரண்டாவது நாளாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளான தூத்துக்குடி பழைய மாநகராட்சி சாலை, கடற்கரை சாலை மற்றும் ரயில்வே ஸ்டேஷன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

Advertisement

மேலும், அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவு மற்றும் இரத்த வங்கி உள்ளிட்ட பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால் நோயாளிகள் சிரமம் அடைந்தனர். இதனால், மழை நீரை உடனே வெளியேற்ற வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு காேரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் கனமழை காரணமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தை மழைநீர் சூழ்ந்ததால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டதால், சிகிச்சைக்கு வந்தவர்கள் அவதிக்கு உள்ளாகினர்.

அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு ஆகிய இடங்களுக்கு செல்லும் வழி முழுவதும் வெள்ளக்காடாக காணப்பட்டதால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர். மருத்துவமனை நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Tags :
FEATUREDheavy rainlow pressureMAINmetrological centerrain alertrain warningtamilnadu raintuticorin rainweather update
Advertisement
Next Article