தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை - 24 மணி நேரத்தில் 591 மி.மீ. மழை பதிவு!
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 591 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Advertisement
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் திருச்செந்தூர் மற்றும் சூரங்குடியில் 61 மில்லி மீட்டர் மழையும், காயல்பட்டினத்தில் 43 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேலும், ஓட்டுமொத்தமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 591 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து கோவில்பட்டியிலும் கனமழை வெளுத்து வாங்கியது. 6 மணி நேரத்திற்கும் மேலாக கோவில்பட்டியில் மழை பெய்த நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.