தென்காசியில் 188 மி.மீ மழை - குற்றால அருவிகளில் வெள்ளம்!
10:14 AM Dec 13, 2024 IST
|
Murugesan M
தென்காசி மாவட்டத்தில தொடர்ந்து பெய்யும் கனமழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Advertisement
தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென்காசியில் நேற்று ஒரே நாளில் 188 மில்லி மீட்டர் மழை பதிவானது.
இதனால் குற்றாலம் மெயின் அருவியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவியில் இருந்த போலீசாரின் கண்காணிப்பு கூண்டு நீரில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில், வெள்ள நீர் கடை வீதிக்குள் புகுந்தது. இதேபோல் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
Next Article