தென்கொரியாவில் காட்டுத்தீ - 17,000 ஏக்கர் வனப்பகுதி சேதம்!
10:46 AM Mar 25, 2025 IST
|
Ramamoorthy S
தென்கொரியாவில் காட்டுத்தீயால் 17 ஆயிரம் ஏக்கர் எரிந்து சேதமாகியுள்ளது.
Advertisement
கியோங்சாங் மாகாணத்தில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. பலத்த காற்றால் இந்த காட்டுத்தீ மளமளவென வேகமாக பரவி வரும் நிலையில், சுமார் 17 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளன.
இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதற்கிடையே அங்கு மீட்பு பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் பலியான நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement