தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
10:38 AM Dec 02, 2024 IST | Murugesan M
கடலூரில் பெய்து வரும் தொடர் மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆற்றங்கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையாலும், சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதாலும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Advertisement
இதனால், குப்பம், உச்சிமேடு, ஞானமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றுநீர் புகுந்து குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் சென்றுகொண்டிருப்பதால், ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா அறிவுறுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement