தெருநாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகள் : இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் போராட்டம்!
04:05 PM Feb 15, 2025 IST
|
Murugesan M
திருப்பூரில் வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழந்த நிலையில், இழப்பீடு வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
Advertisement
காங்கேயத்தில் கடந்த சில தினங்களாக வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள், திருப்பூர் மாவட்ட அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், கால்நடைகள் உயிரிழப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை குண்டுகட்டாக கைது செய்தனர்.
Advertisement
Advertisement