தெலங்கானாவில் தீப்பிடித்து எரிந்த மின்சார இருசக்கர வாகனம்- ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்!
10:02 AM Nov 22, 2024 IST | Murugesan M
தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் 2 லட்சம் ரூபாய் பணம் சேதமாயின.
பாலபள்ளி கிராமத்தை சேர்ந்த திருப்பதி ரெட்டி என்பவர் கடந்த மாதம் மின்சார இருசக்கர வாகனம் வாங்கியுள்ளார். வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்து சார்ஜ் செய்வதை திருப்பதி வழக்கமாக கொண்டுள்ளார். .
Advertisement
இந்நிலையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மின்சார வாகனம் திடீரென தீ பற்றி எரிந்து வெடித்ததில் வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த உணவு தானியங்கள் மற்றும் வாகனத்தில் இருந்து 2 லட்சம் ரூபாய் பணம் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் வாகனம் எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement