செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தெலங்கானாவில் மனைவியை கொலை செய்து கடாயில் வேகவைத்த கணவன்!

05:07 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

தெலங்கானாவில் மனைவியை கொன்று கணவன் கடாயில் போட்டு வேகவைத்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

தெலுங்கானாவில் முன்னாள் ராணுவ வீரரான குருமூர்த்தி, தனது மனைவி மாதவியை அடித்து கொலை செய்து கடாயில் வேகவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து பேசிய ராட்சகொண்ட காவல் ஆணையர் சுதீர் பாபு, அடிக்கடி ஏற்படும் தகராறின் காரணமாக, குருமூர்த்தி அவரது மனைவியை திட்டமிட்டு கொலை செய்ததாக தெரிவித்தார்.

Advertisement

அதன்படி தனது குழந்தைகள் இரண்டு பேரையும் உறவினர் வீட்டில் தங்க வைத்து விட்டு கடந்த 15-ம் தேதி மனைவி மாதவியுடன் வீட்டிற்கு திரும்பியதாக கூறினார்.

மறுநாள் இருவருக்கும் ஏற்பட்ட தகராறின் போது மாதவியை குருமூர்த்தி சுவற்றில் மோதியதாகவும், பின்னர் கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து உடலை மறைக்க துண்டு துண்டாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்ததாகவும், அதன் பின்னர் உடல் பாகங்கள் கரையும் வரை கடாயில் போட்டு வேகவைத்ததாகவும் கூறிய காவல் ஆணையர், அதைத் தொடர்ந்து கரையாத எலும்பு துண்டுகளை குருமூர்த்தி ஏரியில் வீசியதாக தெரிவித்தார்.

பின்னர் உறவினர்களுடன் சேர்ந்து மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாரளித்ததாகவும், ஆனால் போலீசாருக்கு ஏற்பட்ட சந்தகேகத்தின் பேரில் குருமூர்த்தியிடம் நடத்திய விசாரணையில் அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாகவும் காவல் ஆணையர் விளக்கமளித்தார்.

மேலும் இந்த வழக்கில் குருமூர்த்திக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார்.

Advertisement
Tags :
husband killed his wifeMAIN
Advertisement