தெலங்கானாவில் வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க செயினை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள கூக்கட் பள்ளி ஹவுசிங் போர்டு காலனியில் பெண் ஒருவர் வீட்டின் முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார்.
அப்போது முகத்தை மூடியவாறு அங்கு வந்த நபர் முகவரி கேட்பது போல் நடித்து தாகத்திற்கு தண்ணீர் கேட்டுள்ளார். உடனே பெண் தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்ற போது பின்னால் சென்ற நபர் 3 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.