செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தெலங்கானா வங்கியில் 15 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை- சிசிடிவி ஹார்ட் டிஸ்கையும் தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்!

05:37 PM Nov 20, 2024 IST | Murugesan M

தெலங்கானா மாநிலம் வாரங்கல் அருகே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

தெலுங்கானா மாநிலம் வாராங்கல் அருகே  ராயப்பர்த்தியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளை அமைந்துள்ளது. இந்த வங்கியின் ஜன்னலை கேஸ் கட்டர் மூலம் வெட்டி உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அபாய மணி, சிசிடிவி கேமரா இணைப்புகளை முதலில் துண்டித்துள்ளனர்.

பின்னர் லாக்கர்களில் வைக்கப்பட்டிருந்த நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றனர். தப்பி சென்றபோது சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்கையும் கழற்றி எடுத்துச் சென்றுள்ளனர். கொள்ளை போன ஆபரணங்களின் மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், 5 தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

இரவு காவலராக பணியாற்றி வந்த ஒருவர் வேலையை விட்டு சென்ற பின் வேறு காவலர் நியமிக்கப்படாததை அறிந்த கொள்ளையர்கள், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
FEATUREDgold jewellery worth Rs 15 crore theftMAINState Bank of IndiaTelenganatheft in sbiWarangal
Advertisement
Next Article