தெலுங்கானாவில் லாரியின் அடியில் புகுந்த கார் - இருவர் பலி!
தெலுங்கானா மாநிலத்தில், லாரி மீது கார் மோதிய கோர விபத்தில், சிறுமி மற்றும் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ராயகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில், முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, டீசல் பிடிப்பதற்காக, பெட்ரோல் பங்க் இருக்கும் திசை நோக்கி திரும்பியது. அப்போது, அதன் பின்னால் வந்த கார், லாரியின் பின்பகுதியில் சிக்கியது. இதில், காரின் முன்பகுதி முழுவதும் நசுங்கியது.
முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த சிறுமி மற்றும் பெண் உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டனர்.
லாரியின் அடியில் சிக்கிய கார், ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காரில் இருந்தவர்கள் மஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.