தெலுங்கில் அறிமுகமாகும் அதிதி சங்கர் - வெளியானது பைரவம் திரைப்பட டீசர்!
07:30 PM Jan 22, 2025 IST | Sivasubramanian P
அதிதி சங்கர் தெலுங்கில் அறிமுகமாகும் பைரவம் படத்தின் டீசர் வெளியானது.
விருமன் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் அதிதி சங்கர். சமீபத்தில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான 'நேசிப்பாயா' படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். இதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும் அதிதி சங்கர் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
Advertisement
இதன்மூலம் இவர் தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார். விஜய் கனகமெடலா இயக்கி வரும் இப்படத்திற்கு 'பைரவம்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பெல்லம்கொண்டா சாய் சீனிவாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில், பைரவம் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement