செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் - முன்ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி உயர் நீதிமன்றத்தில் மனு!

03:11 PM Nov 11, 2024 IST | Murugesan M

முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகை கஸ்தூரி தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

Advertisement

பிராமண சமூகத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மதுரை திருநகரில் நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரில், கஸ்தூரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  இந்தப் புகாரில் முன்ஜாமின் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகை கஸ்தூரி மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisement

அதில், " தாம் வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு, வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையிலான அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.

Advertisement
Tags :
actress Kasthurianticipatory bailFEATUREDMadurai high courtMAINTelugu people.
Advertisement
Next Article