தேசத்தின் வளர்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது - ஏக்நாத் ஷிண்டே புகழாரம்!
06:30 PM Dec 19, 2024 IST
|
Murugesan M
தேசத்தின் வளர்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது என மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே புகழாரம் சூட்டினார்.
Advertisement
நாக்பூரில் அமைந்துள்ள ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி. ஹெட்கேவாரின் நினைவிடத்தில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசத்தின் வளர்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் பங்களிப்பு இன்றியமையாதது என்றும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் கோட்பாடுகளைதான் சிவசேனா பின்பற்றுவதாகவும் கூறினார்.
Advertisement
முன்னதாக மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவீஸ், கே.பி. ஹெட்கேவாரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அஜித் பவர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சார்பில் இரண்டு நிர்வாகிகள் ஹெட்கேவார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
Advertisement