தேசத்திற்கும், தமிழக மக்களுக்கும் சேவை செய்வதில் உறுதியாக உள்ளேன் - அண்ணாமலை
தேசத்திற்கும், தமிழக மக்களுக்கும் சேவை செய்வதில் உறுதியாக உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறதிப்பட தெரிவத்துள்ளார்.
Advertisement
அவர் விடுத்துள்ள பதிவில், பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமை, மத்திய அமைச்சர் அமித் ஷாவின் அன்பான மற்றும் ஊக்கமளிக்கும் வார்த்தைகள், தேசிய தலைவர் ஜெபி.நட்டாவின் உறுதியான வழிகாட்டுதல், பொதுச் செயலாளர் பிஎல் சந்தோஷின் தொடர்ச்சியான ஆதரவு ஆகியவை எப்போதும் மாநில மற்றும் நாட்டின் நலனை முதன்மைப்படுத்துகின்றன.
நமது மூத்த தலைவர்களின் கடும் உழைப்பு நமது காரியகர்த்தர்கள் களத்தில் சிங்கங்களைப் போலப் போராடி, கொடூரமான மற்றும் தீய திமுகவுக்கு எதிராக அன்றாடம் பிரச்சினைகளை எதிர்கொண்டனர் என தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தும் பிரதமர் மோடியின் நல்லாட்சி மற்றும் விசித் பாரதம் 2047 என்ற தெளிவான அழைப்பை உணர மட்டுமே என கூறியுள்ளார்.
பாஜக தமக்கு தகுதியானதை விட அதிகமாக வழங்கியுள்ளதாகவும், அதனை திருப்பிச் செலுத்தக்கூடிய ஒரே வழி மேலும் கடினமாக உழைப்பதுதான் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஒரு பெருமைமிக்க காரியகர்த்தாவாக, நமது தேசத்திற்கும், தமிழகத்தின் அன்பான மக்களுக்கும் சேவை செய்வதில் உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக பரிந்துரைக்கப்பட்ட நயினார் நாகேந்திரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அவரது தலைமை மற்றும் அனுபவத்தின் கீழ், கட்சி குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் சேவைப் பயணத்தைத் தொடரும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
NDA 2026 இல் ஆட்சிக்கு வரும், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் என அண்ணாமலை கூறியுள்ளார்.